செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் இணைந்த தமன்னா!?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் யாவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் காவியக் கதைகளாக தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று பலர் குரலெழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இருவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் …

செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் இணைந்த தமன்னா!? Read More »

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து, சுதா கொங்கரா அடுத்து யாரை இயக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது சுதா கொங்கரா அடுத்து சிம்புவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் …

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!? Read More »

ஈஸ்வரன் ட்ரைலரில் தனுஷை மறைமுகமாக சாடியுள்ளாரா சிம்பு!?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ட்ரைலரில் ‘அசுரன்’ குறித்த வசனம் இடம் பெற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளனர். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்பு 30 …

ஈஸ்வரன் ட்ரைலரில் தனுஷை மறைமுகமாக சாடியுள்ளாரா சிம்பு!? Read More »

நம்மை மகிழ்விக்கும் அவர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்… குக் வித் கோமாளி டீமை பாராட்டிய பிரபல நடிகர்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களைப் பாராட்டியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் காமெடி செய்து மக்களை மகிழ்விக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் விஜய் டிவி குழுமத்தினர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழ் பெரும் புகழை அடைந்துவிட்டார். சிவாங்கி, பாலா, ரம்யா பாண்டியன், மணிமேகலை, தர்ஷா குப்தா, பவித்ரா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் …

நம்மை மகிழ்விக்கும் அவர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்… குக் வித் கோமாளி டீமை பாராட்டிய பிரபல நடிகர்! Read More »

இதைச் செய்யும் போது தான் எனக்கு அலாதி இன்பம்… ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திய தகவல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமையல் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர். டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா முட்டை‘ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் இரு பசங்களுக்கு அம்மாவாக தயங்காமல் நடித்தார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைத்தது. …

இதைச் செய்யும் போது தான் எனக்கு அலாதி இன்பம்… ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திய தகவல்! Read More »

இயக்குனராகக் களமிறங்கும் தமிழ் சினிமா பிரபலத்தின் பேரன்!

தமிழ் சினிமாவின் பழம்பரும் பாடலாசிரியர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல நடிகர்களுக்கு காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதியுள்ளார். தற்போது புலமைப்பித்தனின் பேரன் திலீபன் தற்போது இயக்குனராக நுழைய உள்ளார். அப்படம் க்ரைம் த்ரில்லர் ஜேர்னரில் உருவாக இருக்கிறது. காதலியால் கழட்டிவிடப்பட்ட ஒருவனைச் சுற்றி கதை நகருகிறது. காதலில் தோற்ற அவன் சைக்கோவாக மாறி பழிவாங்குவது தான் கதை என்றும் கூறப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மும்பையைச் சேர்த்த பிராச்சி …

இயக்குனராகக் களமிறங்கும் தமிழ் சினிமா பிரபலத்தின் பேரன்! Read More »

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணைந்த தனுஷ்… இன்று படப்பிடிப்பு துவக்கம்!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. கோலிவுட்டில் அதிக படங்களைக் கையில் வைத்துள்ள நடிகர்களில் விஜய் சேதுபதியை அடுத்து தனுஷ் தான் இருப்பார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல படங்களைக் கையில் வைத்துள்ளார் தனுஷ். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் படத்தின் …

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணைந்த தனுஷ்… இன்று படப்பிடிப்பு துவக்கம்! Read More »

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள பீட்சா 3 படத்தின் முன்னோட்டம் !

நடிகர் அஸ்வின் காக்கமானு நடிப்பில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நடிப்பில் 2013-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் அஷ்வின் இயக்கத்தின் பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படித்தை அறிமுக இயக்குனர் மோகன் …

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள பீட்சா 3 படத்தின் முன்னோட்டம் ! Read More »

தியேட்டரிகளில் முழு இருக்கைகளுக்கு அனுமதி…நடிகர் அரவிந்த் சாமி எதிர்ப்பு…என்ன காரணம்!?

தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து நடிகர் அரவிந்த் சாமி அதுகுறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன. அதனால் தியேட்டர்களில் தற்போது 50% இருக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை 100%-க்கு மாற்ற விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தார். அதையடுத்து சிம்புவும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதையடுத்து தமிழகத்தில் …

தியேட்டரிகளில் முழு இருக்கைகளுக்கு அனுமதி…நடிகர் அரவிந்த் சாமி எதிர்ப்பு…என்ன காரணம்!? Read More »

ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்!

ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கத்தில் ருத்ரன் என்ற படத்தில் நடிக்கவிருக்குகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.இன்று ப்ரியா பவானி ஷங்கர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு இன்று அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது ருத்ரன் படத்தில் ப்ரியா …

ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்! Read More »