பிரபல பாலிவுட் நடிகரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிப்பு!

பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா இமாச்சலபிரதேஷ விருந்தினர் மாளிகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ஆசிப் பாஸ்ரா பாலிவுட்டில் பிரபலமானவர். இவர் காவோ, பெ சே, பர்சானியா, மற்றும் ப்ளாக் ஃப்ரைடே போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார் . தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்திலும் இவர் நடித்துள்ளார். ‘அவுட்சோர்ஸ்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகமானவர்.

இந்நிலையில், இமாச்சலப்பிரதேஷ மாநிலத்தின் தர்மஷாலாவில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் நடிகர் ஆசிப் பாஸ்ராவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 53 வயதான நடிகர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிப் பாஸ்ராவின் மரணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.