தொடாத இடமே கிடையாது… பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கும் ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்மிகாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துவிட்டார். தெலுங்கு அல்லாமல் மற்ற மொழி படங்களிலும்பல படங்களில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்மிகா பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய பஅப்டேட்டின் படி, ரஷ்மிகாவை பாலிவுட் ராப் பாடகர் பாட்ஷா ஒரு படத்தில் நடிக்க அணுகியுள்ளார். பாட்ஷா சிறந்த ராப் இசை பாடல்களுக்காக பிரபலமானவர். தற்போது ஒரு மியூசிக் வீடியோவை உருவாக்க விரும்பிய பாட்ஷா, அந்த வீடியோவில் நடிக்க ரஷ்மிகாவை அணுகியுள்ளார். ரஷ்மிகாவும் அந்தப் பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். தற்போது சண்டிகர் மாநிலத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தென்னிந்திய நடிகைகள் யாரும் பாட்ஷாவின் எந்த இசை வீடியோவிலும் இடம்பெறவில்லை. இப்போது ரஷ்மிகா நடிக்க இருப்பதால் அவரின் புகழ் பாலிவுட்டிலும் பரவும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் டியர் காமிரேட் படத்தின் ஹிந்தி றரீமேக்கில் நடிக்க ரஷ்மிகாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published.