டெக்னாலஜில புகுந்து விளையாடுற நோலன் வைத்திருப்பது எந்த மொபைல் தெரியுமா!?

ஹாலிவுட் இயக்குநர்களில் சிலர் மட்டுமே உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பர். அவர்களில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மிக முக்கியமானவர். அவர் படங்கள் எடுக்கும் பாணியே அனைவரையும் வியக்க வைத்துவிடும். இவரது படங்களை ஒரு முறை பார்த்தால் புரிந்துகொள்வது கடினம். அந்தளவிற்கு மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் படங்கள் எடுப்பார்.

தற்போது அவரைப் பற்றி சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. கிறிஸ்டோபர் நோலன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில்லையாம். சாதாரணமான ப்ளிப் மொபைல் ஒன்று மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இவ்வளவு டெக்னலாஜியைப் பற்றி படம் எடுப்பவர் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

“என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பது உண்மைதான். அவ்வப்போது என்னுடன் எடுத்துச் செல்லும் ஒரு சிறிய ஃபிளிப் ஃபோன் என்னிடம் உள்ளது. நான் எளிதில் மற்ற விஷயங்களில் திசைதிருப்பக்கூடியவன், அதனால் நான் ஒவ்வொரு முறையும் இன்டர்நெட் பயன்படுத்த விரும்பவில்லை. நான் சலித்துவிட்டேன், ” என்று நோலன் தெரிவித்துள்ளார்.

மக்கள் இப்போது ஆன்லைனில் தங்களின் பெரும்பாலானநேரத்தை செலவிடும் அதே வேளையில் நான் பல ஆக்கபூர்வமான செயல்களைச் செய்கிறேன். அதனால் அது எனக்கு நன்மை அளிக்கிறது. போன் வைத்திருப்பவர்கள் என்னை சுற்றி வேலை செய்வார்கள். எனவே நான் பணிபுரியும் போது தொடர்பு கொள்வது மிகவும் எளிதானது. நான் ஒருபோதும் மக்களுடன் தொடர்புகொள்வதில் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை. ஒரு லேண்ட்லைனில் இருந்து மக்களை அழைப்பதை நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு வழியைப் பயன்படுத்துகின்றனர். ” என்றும் நோலன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.