எண்ட்கேம் படத்தில் லோகி எஸ்கேப் ஆனது எங்கே?… பதிலை வெளியிட்டுள்ள மார்வல்!

டிஸ்னி மற்றும் மார்வெல் இணைந்து வில்லனை ஹீரோவாக மாற்றியுள்ள லோகியின் முதல் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த சீரிஸ் ‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தெரிகிறது.

கடந்த ஆண்டு வெளியான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் டோனி ஸ்டார்க்(ஐயன் மேன்) மற்றும் ஆண்ட்-மேன் இருவரும் இன்பினிட்டி கற்களைசேகரிக்க டைம் ட்ராவல் செய்வார்கள். அப்போது லோகி வரும் காட்சியில் குழப்பம் ஏற்பட்டு டெஸராக்ட் லோகி பக்கத்தில் போய் விழுந்துவிடும். யாரும் பார்க்காத போது அதை எடுக்கும் லோகி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்.

இந்த சீரிஸில் லோகி தப்பித்து எங்கு போனார்? என்ன செய்தார் என்பதை விலாவாரியாக காண்பிக்க இருக்கிறார்கள். லோகி காட் ஆஃப் மிஷீஃப் தனது அண்ணனின் நிழலிலிருந்து விலகி என்ன செய்கிறார் என்பதைக் காண்பித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கி விழுந்த மதுமிதா… என்ன காரணம் தெரியுமா!?

காமெடி நிறைந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஓவன் வில்சன், குகு மபாதா-ரா, சோபியா டி மார்டினோ, வுன்மி மொசாகு மற்றும் ரிச்சர்ட் இ. கிராண்ட் ஆகியோரும் நடிக்கின்றனர். மே 2021 இல் டிஸ்னி பிளஸில் இந்த சீரிஸ் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Comment

Your email address will not be published.