தியேட்டரிகளில் முழு இருக்கைகளுக்கு அனுமதி…நடிகர் அரவிந்த் சாமி எதிர்ப்பு…என்ன காரணம்!?

தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து நடிகர் அரவிந்த் சாமி அதுகுறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன. அதனால் தியேட்டர்களில் தற்போது 50% இருக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை 100%-க்கு மாற்ற விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தார். அதையடுத்து சிம்புவும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதையடுத்து தமிழகத்தில் 100% இறக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Image

இந்த அறிவிப்பிற்கு சிலர் ஆதரவாக கருத்துத் தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ள முதல் மாநிலம் தமிழகம் தான். திரைத்துறையைச் சேர்ந்த பலர் இந்த அறிவிப்பைப் பாராட்டி வரும் நிலையில் நடிகர் அரவிந்த் சாமி இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று நோய் காலத்தில் 100 சதவிகிதத்தை விட 50 சதவீதம் சிறந்தது என்று கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘100% ஐ விட 50% சிறந்ததாக இருக்கும் நேரங்கள் உள்ளன. இது அவற்றில் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.