சுந்தர் சி-க்கு மிரட்டல் வில்லனாக மாறும் ஜெய்!

இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் நடிகர் ஜெய் வில்லனாக அவருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று சில இயக்குனர்களே உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் சுந்தர் சி. இயக்கம் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞர். காமெடியில் மட்டும் தான் கலக்குவார் என்று பார்த்தால் ‘அன்பே சிவம்’ மாதிரியான கிளாசிக் படத்தையும் இயக்குவார். ‘அருணாச்சலம்’ மாதிரியான கமர்ஷியல் படங்களையும் உருவாக்குவார். நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் சுந்தர் சி.

தற்போது சில காலமாக இந்தப் படத்திலும் சுந்தர் சி நடிக்காமல் இருந்த சுந்தர் சி தற்போது மீண்டும் நடிகராக களமிறங்க இருக்கிறார். அவரிடம் இணை இயக்குநரானாகப் பணியாற்றிய பத்ரி தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற படம் உருவாகி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. தற்போது பத்ரி இயக்கும் படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய் சுந்தர் சி-க்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோவை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக ஜெய் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி, ஜெய் இருவரும் கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published.