மீண்டும் இணையும் ‘சிவா மனசுல சக்தி’ பட சூப்பர் ஹிட் கூட்டணி!

சிவா மனசுல சக்தி பட கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் ராஜேஷ் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தில் ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி மிகவும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருந்தது. தனது முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என்ற முத்திரையை பதித்தார் ராஜேஷ். அதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் இதே பாணியில் இருந்தன. அவற்றில் சில படங்கள் தோல்வியுற்றாலும் பெரும்பாலான படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது ராஜேஷ் மற்றும் ஜீவா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மிஸ்டர் லோக்கல் படம் பாக்ஸ் ஆபீஸ் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. தற்போது ராஜேஷ் ஜீவா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் மீண்டும் அவருக்கு ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு காமெடி ரோலில் ஜீவாவைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில் ஜீவா ‘நடிப்பில் களத்தில் சந்திப்போம்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதையடுத்து ‘மேதாவி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்

Leave a Comment

Your email address will not be published.