மின்னல் வேகத்தில் கொரோனாவை வென்று வீடு திரும்பிய சுப்ரீம் ஸ்டார்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்குமார் தற்போது டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வர பலரும் பிரார்த்தனை செய்தனர்.

தற்போது வரலட்சுமி சரத்குமார் அப்பா டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அப்பா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மேலும் பொது தொடர்பிலிருந்து அதிகபட்சம் பத்து நாட்கள் சுய தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். கொரோனா இன்னும் நம் அனைவருக்கும் ஆபத்தானது என்பதைக் காண்பித்து வருகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் இந்த தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டால் மட்டுமே நாம் இந்த வைரஸின் ஆபத்துக்களை உணருகிறோம். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள் மற்றும் மிக முக்கியமாக பாதுகாப்பாக இருக்கசமூக இடைவெளியைப் பின்பற்றவும். அனைத்து அன்பிற்கும் ஆதரவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.