வாணி போஜன், பிந்து மாதவி….சசிகுமாருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள்!

நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார், திருமணம் எனும் நிக்கா படத்தின் இயக்குனர் அனீஸ் உடன் கூட்டணி அமைத்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை 4மங்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Image

இன்று இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படம் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். முதலில் இப்படத்தில் லூசியா படத்தில் நடித்த சதீஷ் நினஷம் என்பவர்தா ன் நடிப்பதாக இருந்தது. பின்பு சசிகுமார் கதாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சசிகுமார் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’, ‘பரமகுரு’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.