ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கி விழுந்த மதுமிதா… என்ன காரணம் தெரியுமா!?

நடிகை ஜாங்கிரி மதுமிதா படப்பிடிப்புத் தளத்தில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

நடிகை மதுமிதா தமிழில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் சந்தானத்தின் ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது ஜாங்கிரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப் பிரபலம். அதனாலேயே இவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

மதுமிதா தற்போது இயக்குனர் சுந்தராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் ’அனபெல் சுப்ரமணியம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் ஓர் அரண்மனையில் நடைபெற்றது. படப்பிடிப்பில் மதுமிதா அவசரமாக சமையல் செய்யும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது துரதிருஷ்டவசமாக சூடான எண்ணெய் மதுமிதா இடுப்பில் தெறித்து காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்தால் வலி ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொண்டு மது அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லை அன்றைக்கு படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் மதுமிதாவுக்கு காயம் ஏற்பட்டது படக்குழுவினருக்கே தெரிய வந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அவரை அன்பாகக் கடிந்துகொண்டுள்ளனர்.

மதுமிதா மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் எப்போதும் பக்தி மயமாகவே இருப்பார். அதனால் தவறாமல் விரதம் மேற்கொண்டு வருபவர் மதுமிதா. அதுபோல் ஒருநாள் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் மேற்கொண்ட மதுமிதா படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு மருத்துவ உதவி அளித்துள்ளார். ஆனாலும் கூட அடுத்து தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்னரே சாப்பிடச் சென்றிருக்கிறார் மதுமிதா.

தன்னால் படப்பிடிப்பிற்கு சிறிதளவில் கூட பாதிப்பு வரக்கூடாது என்ற மதுமிதாவின் அர்ப்பணிப்பு அனைவரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

1 thought on “ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கி விழுந்த மதுமிதா… என்ன காரணம் தெரியுமா!?”

  1. Pingback: எண்ட்கேம் படத்தில் லோகி எஸ்கேப் ஆனது எங்கே?... பதிலை வெளியிட்டுள்ள மார்வல்! - Cine Tech

Leave a Comment

Your email address will not be published.