vikram-vedha-ameer-khan

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய அமீர் கான்!?

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் அமீர் கான் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இரு கதாபாத்திரங்களும் சமமான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததே படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.

அதையடுத்து விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. புஷ்கர்- காயத்ரி பாலிவுட்டில் ஷாருக் கானிடம் இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவருக்கு அப்படத்தில் ஆர்வம் இல்லாததால் அதிலிருந்து விலகிவிட்டார். பின்னர் அமீர் கானிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவருக்கு கதை பிடித்துவிட்டத்து. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடிப்பது உறுதியானது. ஆனால் அமீர் கான் கதையில் சில மாற்றங்கள் செய்தார்.

எல்லாம் முடிவாகி படம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பித்ததால் படம் முடங்கியது. அதையடுத்து தற்போது மீண்டும் படத்தைத் துவங்க ஆயத்தமாகியுள்ளனர். ஆனால் இதற்கு முன்னர் ஒப்புக்கொண்டது போல் அல்லாமல் நிறைய மாற்றங்கள் உருவாகியிருப்பதாகக் கூறி அமீர் கான் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.