எம்ஜிஆரை கண் முன்னே கொண்டு வரும் அரவிந்த் சாமி… தலைவி படப்பிடிப்பில் ருசிகரம்!

நடிகர் அரவிந்த் சாமி தலைவி படத்தில் தனக்கான பங்கை நடித்து முடித்துள்ளார்.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலைமைச்சர் ஜெயலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். இப்படத்தில் அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் ஆக நடித்துள்ளார். நடிகை பூர்ணா சசிகலாவாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தான் கங்கனா தலைவி படத்தின் படப்பிடிப்பை முடிந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். தற்போது அரவிந்த் சாமியும் இப்படத்தில் தனக்கான பங்கை நடித்து முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “புரட்சித் தலைவரின் அழகையும் கவர்ச்சியையும் என்னை முடிந்தவரை நெருங்குவதற்காக இந்த படத்தில் கடைசியாக தனது மந்திரத்தை வேலை செய்யும் மனிதன் – டை ரஷீத் சார்.. படப்பிடிப்பின் கடைசி நாள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் அரவிந்த் சாமி எம்ஜிஆராகவே வாழ்ந்துள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published.