இது எம்ஜிஆரா, அரவிந்த் சாமியா? குழப்பத்தில் ரசிகர்கள்!

தலைவி படத்தில் நடித்து வரும் அரவிந்த் சாமியின் எம்ஜிஆர் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஏஎல் விஜய் மறைந்த முன்னாள் தமிழக முதலைமைச்சர் ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் எடுத்து வருகிறார். இப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் ஆக நடித்துள்ளார். நடிகை பூர்ணா சசிகலாவாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Image

தலைவி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கங்கனா அரவிந்த் சாமி இருவரும் தலைவி படத்தில் நடித்துமுடித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள அரவிந்த் சாமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எம்ஜிஆர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் மக்களிடையே மிகப் பிரபலம். தற்போது தலைவி படக்குழு அந்தப் புகைப்படத்தை அரவிந்த் சாமியுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். அதில் அவர் பார்ப்பதற்கு எம்ஜிஆர் போலவே தோற்றமளிக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல்.விஜய் & தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் ஷைலேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். இந்த படங்களை நான் தலைவரின் நினைவகத்தில் தாழ்மையுடன் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.