விஷாலை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் ஆர்யா!?

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. சந்தனக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தான் பல நடிகர்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக அணுகப்பட்டார். ஆனால் அவர் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்ததால் இந்த படவாய்ப்பை நிராகரித்தார்.

பின்னர் ஜெகபதி பாபு நடிப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து விக்ரம் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாவதாகக் கூறப்பட்டது. தற்போது நடிகர் ஆர்யா புஷ்பா படத்தின் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

புஷ்பா’வில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும், கன்னட நடிகர் தனஞ்சயா ஒருவராகவும், தெலுங்கு நடிகர் சுனில் மற்றவராகவும் நடிக்கிறார்கள். தற்போது மூன்றாவதாக ஆர்யா இப்படத்தில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யாவின் பாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா ஏற்கனவே விஷாலுக்கு வில்லனாக எனிமி படத்தில் நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுன் படத்தில் ஆர்யா நடிப்பது உறுதியானால் இந்த வருடம் அவரை மிரட்டல் வில்லன் அவதாரத்தில் பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published.