முதன்முறையாக ஜோடி சேரும் அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர் ஜோடி!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தப் படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் புதிய கதை என்று தெரிவித்துள்ளார். காமெடி எண்டெர்டெயினராக இப்படம் உருவாக உள்ளது.


தற்செயலாக, சுமந்த் சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் சுகர் என்ற படத்தில் பணியாற்றி வந்தார். ஆனால் அப்படம் பெரிய அளவில் உருவாகி வந்ததால் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்படவேண்டி இருந்தது. எனவே அப்படத்தை சில காலத்திற்கு தள்ளி வைத்தார். “அந்த நேரத்தில் வேறொரு ஸ்கிரிப்ட்டில் ஈடுபட எனக்கு நேரம் கிடைத்தது. அப்படி தான் இந்தப் படம் உருவாகியது.

‘ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்த பின்னர் அசோக் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் படத்தின் ஒன் லைனைக் கூறினேன். ப்ரியா தான் ஹீரோயினுக்கான எனது முதல் தேர்வு. ஹோம்லி லுக் கொண்ட ஒருவரை நான் தேடினேன். ப்ரியா அப்படியே இருந்தார். இவர்கள் இருவரும் இணைவது புதிதாகவும் இருக்கும்” என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நாசர், முனிஷ்காந்த், கலக்கப்போவது யாரு யோகி, ரவி மரியா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். போபோ சஷி இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். “ஜனவரி 5 முதல் படப்பிடிப்பைத் தொடங்குவோம், தற்போது சென்னையில் ஒரு பெரிய ஹாஸ்டல் அமைத்து வருகிறோம் ”என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.