இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அசுரன் திரைப்படம்!

அசுரன் திரைப்படம் இந்திய அரசு நடத்தும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் நான்காவதாக ‘அசுரன்’ படம் உருவானது. இந்தக் கூட்டணி இணைகிறது என்றாலே படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை கோலிவுட்டில் ஏற்பட்டுவிட்டது. அசுரன் படமும் அந்த நம்பிக்கையை பெரிய அளவில் நிரூபித்துக் காண்பித்தது. அந்தக் கதையில் கனம், தாக்கம், வலிமை, உணர்வுகள் அனைத்தையும் அப்படியே பார்வையாளர்களுக்கும் கடத்தினார் வெற்றிமாறன். அசுரன் தலைப்பிற்கு ஏற்றவாறு தனுஷ் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அசுரன் படத்திற்கு இதுவரை பல அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது இந்திய அரசு சார்பில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கணேஷ் விநாயகன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ என்ற படமும் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பனோரமா என்ற பெயரில் கோவாவில் நடக்கும் இந்தத் திரைப்பட விருது விழாவில் மலையாளத்தில் இருந்து அன்னா பென் நடிப்பில் வெளியான கப்பேலா படம் தேர்வாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.