தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஹாரர் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2017-ல் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவான அவள் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

அறிமுகமான முதல் படத்திலேயே மிகச்சிறந்த ஹாரர் த்ரில்லர் படத்தைக் கொடுத்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் தீவிரமாக இறங்கியுள்ளார் மிலிந்த் ராவ். மிலிந்த் ராவ் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் இந்தப் படத்திலும் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


அவள் படத்திற்கான கதையில் மிலிந்த் ராவுடன் பணியாற்றியிருந்தார். அதோடு தயாரிக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்தை வேறொரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மிலிந்த் ராவ் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.