இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது… ‘கே.ஜி.எஃப்’ 2 படத்தின் மிகப்பெரிய அப்டேட்!

கேஜிஎஃப் 2 படத்தின் முக்கிய அப்டேட் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கேஜிஎஃப் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாடம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரஷாந்த் நீல் இப்படத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார்.

கேஜிஎஃப் 2 படத்திற்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே கேஜிஎஃப் 2 படம் பற்றிய அப்டேட் கொடுக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது படக்குழுவினர் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாங்கள் கே.ஜி.எஃப் 2 படத்தின் முடிவை நெருங்கி வருகிறோம் என்று உங்களுக்குச் சொல்லும் நாள் இறுதியாக வந்துவிட்டது. எப்போதும் டிசம்பர் 21-ஆம் தேதி எங்கள் அற்புதமான பார்வையாளர்களுக்கு சிறந்த அப்டேட் ஒன்று கொடுப்பது எங்கள் வழக்கம். அதேபோல் இந்த வருடமும் டிசம்பர் 21-ம் தேதி காலை 10.08 மணிக்கு எண்களின் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் அப்டேட் வெளியாகும். எப்போதும் போல பொறுமை காத்ததற்கும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரஷாந்த் நீல் பிரபாஸுடன் ‘சலார்’ என்ற பிரம்மாண்ட படத்தில் கூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

Leave a Comment

Your email address will not be published.