மற்றொரு பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை மறைவு… சோகத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் பிரபலம் ஆரவின் தந்தை காலமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடலாக வலம் வந்த ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்று டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ஆரவ் சமீபத்தில் நடிகை ராஹீயைத் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஆரவின் தந்தை டாக்டர் நிலாமுதீன் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 1.30 மணிக்கு காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரவ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தைஏற்படுத்தியுள்ளது . ஆரவ் சொந்த ஊரான நாகர்கோயிலில் இறுதிச்சடங்குகள் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.