மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்… 50 லட்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விஷால் தற்போது ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது விஷால் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். பைனான்சியர் விஜய் கோத்தாரிடமிருந்து விஷால் பெற்ற 50 லட்சம் ரூபாயைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் சண்டைக்கோழி 2 படத்திற்காக பைனான்சியர் விஜய் கோத்தாரியிடமிருந்து 50 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் விஷால் தற்போது வரை அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. எனவே பைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் கோத்தாரியிடம் . 50 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஆர்யாவுடன் கூட்டணி அமைத்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ‘சக்ரா’ படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.