விஜய் சார் நடித்துள்ள மாஸ்டர், தியேட்டர்ல போய் பாருங்க… ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதை அடுத்து தனுஷ் ரசிகர்களை தியேட்டர் சென்று படம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பெரிய படங்கள் ஏதும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. அதனால் பார்வையாளர்களின் வரவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

Image

ஒரு பெரிய ஹீரோவின் படம் தியேட்டர்களில் களமிறக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் தியேட்டர்களில் கூட்டம் கலைகட்டும். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. விஜயின் படம் என்பதால் தியேட்டர்களில் மக்கள் வருகை இயல்புக்கு வரும் என்று கோலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை பரவியுள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “விஜய் சார் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 அன்று வெளியாகிறது.
சினிமா பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவத்திற்கு எதுவும் ஈடாகாது. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி திரையரங்குகளில் படம் பாருங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.