அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் இணைந்த தனுஷ்! இரண்டாவது ஹாலிவுட் என்ட்ரி!

நடிகர் தனுஷ் அவென்ஜர்ஸ் பட இயக்குனர்களின் கூட்டணியில் இரண்டாவதாக ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார்.

தனுஷின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் போகிறது. தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரையில் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார். ஏற்கனவே ‘எக்ஸ்டரார்டினரி ஜேர்னி ஆப் பகிர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்துவிட்டார். அப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியானது. தற்போது தனுஷ் இரண்டாவதாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ள கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இது தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் நெட்பிலிக்ஸ் ஒரிஜினல் படம் என்று கூறப்படுகிறது. அவென்ஜர்ஸ் படங்களின் திரைக்கதை எழுத்தாளர்களான கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரையும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.


எழுத்தாளர் மார்க் கிரீனியின் 2009 நாவலை அடிப்படையாகக் கொண்டு, ‘தி கிரே மேன்’ படம் உருவாக இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published.