துல்கர் சல்மான், காஜல், அதிதி கூட்டணியின் ‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பு நிறைவு !

துல்கர் சல்மான் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

துல்கர், அதிதி ராவ் ஹைடாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் ஹே சினாமிகா என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நடன இயக்குனர் பிருந்தா கோபால் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 26 அன்று முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் பாக்யராஜ், சுஹாசினி மணி ரத்னம், குஷ்பு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். மும்மரமாக நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தற்போது மீண்டும் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

‘ஓகே கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ஹே சினாமிகா பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published.