‘ஈஸ்வரன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியிட்டுள்ள சிம்பு !

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Image

ஈஸ்வரன் படத்திலிருந்து வெளியாகும் அப்டேட்களுக்கு மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட அப்டேட்களை ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

வரும் 14-ம் தேதி ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். பாண்டிச்சேரி படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published.