நம்மை மகிழ்விக்கும் அவர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்… குக் வித் கோமாளி டீமை பாராட்டிய பிரபல நடிகர்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களைப் பாராட்டியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் காமெடி செய்து மக்களை மகிழ்விக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் விஜய் டிவி குழுமத்தினர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழ் பெரும் புகழை அடைந்துவிட்டார். சிவாங்கி, பாலா, ரம்யா பாண்டியன், மணிமேகலை, தர்ஷா குப்தா, பவித்ரா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெரும் புகழை அடைந்துள்ளனர்.

தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆர்வமுடன் ரசித்துப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண், குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் எனது சமீபத்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது! அனைத்து போட்டியாளர்களும் விதிவிலக்காக சிறப்பாக செயல்படுகிறார்கள். நம்மை மகிழ்வித்ததற்காக நன்றி தெரிவிக்க அவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். கிரியேட்டிவ் டீம் விஜய் தொலைக்காட்சிக்கு வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.