2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வத்தைப் பற்றி உருவாகும் படம்… இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் சிவி குமார் தொன்மையான கடவுளைப் பற்றி படம் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சிவி குமார் தமிழில் அட்டகத்தி, சூது கவ்வும், பீட்சா, முண்டாசுப்பட்டி, இறுதிச் சுற்று உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். சந்தீப் கிஷான் நடிப்பில் வெளியான மாயவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

தற்போது தனது மூன்றாவது படத்தைத் துவங்கியுள்ளார். கொற்றவை என்ற பெயர் கொண்ட பாலைவன தெய்வமாக வணங்கப்பட்ட பாண்டிய தமிழ் கடவுளைச் சுற்றி வரும் சாகசத் திரைப்படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.


“படம் உண்மை மற்றும் கற்பனை கலந்த வகையில் உருவாக இருக்கிறது. இது மாதிரி கதைகள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானது, மேலும் தி டா வின்சி கோட், நேஷனல் டிரஸர் சீரிஸ் வகையில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு புதையல் வேட்டையைப் பற்றியது, இதில் பல்வேறு போர்வீரர்கள் அடங்கியுள்ளனர். அவர்களின் போட்டி பல தலைமுறைகளாக நடக்கிறது. பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கிறது ”என்று சிவி குமார் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு அஸ்தமனம் திரைப்படத்தில் நடித்த ராஜேஷ் கனகசபாய், மற்றும் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் படத்தில் இயக்குனர் கவுரவ் நாராயணன், வேலராமமூர்த்தி, அனுபமா குமார் மற்றும் பவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

தலைப்பைப் பற்றி குமார் கூறுகிறார், “கொற்றவை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களால் வணங்கப்பட்ட ஒரு பண்டைய தெய்வம். இந்த தெய்வம் புதையல் வேட்டையில் உருவாகும். ” இந்த வாரத் தொடக்கத்தில் காரைக்குடியில் குழு படப்பிடிப்பைத் துவங்கியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published.