ஈஸ்வரன் படத்திலிருந்து தமிழன்டா பாட்டு நாளை வெளியாகிறது!

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் பாடலான தமிழன்டா பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளனர்.

Image

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்பு 30 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய கெத்து காட்டினார். அதையடுத்து அவரின் ஒவ்வொரு அசைவும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. ஈஸ்வரன் படப்பிடிப்பில் ஒரே மாதத்தில் நடித்து முடித்தார். தற்போது மாநாடு படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் படத்திலிருந்து வெளியான அனைத்து அப்டேட்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழன் பாட்டு என்ற பாடலை காலை 10.11 மணிக்கும் அந்த பாடலின் லிரிக் விடியோவை மாலை 04..50 மணிக்கும் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published.