இயக்குனராகக் களமிறங்கும் தமிழ் சினிமா பிரபலத்தின் பேரன்!

தமிழ் சினிமாவின் பழம்பரும் பாடலாசிரியர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல நடிகர்களுக்கு காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதியுள்ளார். தற்போது புலமைப்பித்தனின் பேரன் திலீபன் தற்போது இயக்குனராக நுழைய உள்ளார்.

அப்படம் க்ரைம் த்ரில்லர் ஜேர்னரில் உருவாக இருக்கிறது. காதலியால் கழட்டிவிடப்பட்ட ஒருவனைச் சுற்றி கதை நகருகிறது. காதலில் தோற்ற அவன் சைக்கோவாக மாறி பழிவாங்குவது தான் கதை என்றும் கூறப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மும்பையைச் சேர்த்த பிராச்சி சின்ஹா, என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

“இயக்கம் எப்போதும் எனது முதன்மை ஆர்வமாக இருந்து வருகிறது. எனது படிப்புக்குப் பிறகு நான் லண்டனில் இருந்து திரும்பியபோது, ​​எனக்கு ஆடிஷனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதனால் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015 ஆம் ஆண்டிலேயே ஒரு படம் இயக்க வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருந்தது. ஸ்கிரிப்ட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். லாக்டவுனைப் பயன்படுத்தி கதையை நன்றாக மெருகூட்டினேன். ”என்றும் திலீபன் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.