‘ஜிவி’ பட எழுத்தாளர் இயக்குனராக அறிமுகமாகும் படம்… டீசர் வெளியானது!

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜீவி’ படத்தின் எழுத்தாளர் பாபு தமீஜ் இக் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தர்ம்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கால்பந்து வீரரின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திறமையான கால்பந்து வீரரைச் சுற்றி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.