“மறுபடியும் காதலில் விழுந்திருக்கிறேன்… இப்ப சந்தோஷமா”… நடிகை வனிதா விஜயகுமார் பதிவு!

நடிகை வனிதா விஜயகுமார் மறுபடியும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடம் பிரபலமான வனிதா விஜயகுமார் பின்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தான் கோலிவுட்டில் நடந்த மிக பரபரப்பான திருமணம் என்று கூட சொல்லலாம். திருமணத்திற்குப் பிறகு சில காலத்திற்கு இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு வனிதா தன் குழந்தைகள் மற்றும் பீட்டர் பால் உடன் கோவா சுற்றுலா சென்றிருந்தார். வழி நெடுக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். பின்னர் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு பிரச்சினை செய்ததால் வனிதா பீட்டர் பாலை வெளியேற்றியதாகக் கூறப்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் வனிதா பீட்டர் பாலை பிரிந்தார். அதையடுத்து வனிதா சில நாட்களுக்கு சோகத்தில் தான் வலம் வந்தார்.

பாவக்கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தைப் பார்த்து வியந்த சூர்யா!

தற்போது தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மறுபடியும் காதலில் உள்ளேன். இப்பொழுது சந்தோசம் தானே உமா ரியாஸ்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published.