இதைச் செய்யும் போது தான் எனக்கு அலாதி இன்பம்… ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்திய தகவல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமையல் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர். டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா முட்டை‘ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் இரு பசங்களுக்கு அம்மாவாக தயங்காமல் நடித்தார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

தற்போது சமையல் மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சில தினங்களுக்கு முன்பு கூட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அவர் தோசைக்கல்லில் லாவகமாக ஆனியன் தோசை சுட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது நியாபகம் இருக்கிறதா? அந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

சமையல் எப்போதும் எனது பாதிப்படைந்த பகுதிகளை வெளியேற்றுகிறது. எப்போதும் என்னை ஒரு புன்னகைக்க வைக்கிறது. என் இந்த பதிப்பு பில்டர் உபயோகிக்கப்படாதது. உணர்ச்சிகள் மற்றும் நிறைய அன்புகளால் நிறைந்துள்ளது. அமேசான் பிரேமில் மாறா படம் இன்று, பார்க்கும்போது என் எல்லா நினைவுகளையும் கண் முன்னால் வந்து போயின.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.