ரத்தமும் சதையுமாக கலந்த கதாபாத்திரம் முடிந்துவிட்டது….தலைவி படம் குறித்து கங்கனா ரணாவத்!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்து வந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். தலைவி படத்திலிருந்து மேலும் சில புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா “படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்று எங்களது லட்சியத் திரைப்படமான தலைவி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். ஒரு புரட்சிகரத் தலைவி, அரிதான நடிகர் என ரத்தமும் சதையுமாக உடன் கலந்த ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. ஆனால் உடனே நிறைவடைந்துவிட்டது. கலவையான உணர்வுகளைக் கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் கங்கனா ஜெயலலிதாவை கண் முன் நிறுத்துகிறார் என்றே சொல்லலாம். அதற்காக நிறைய மெனக்கிடவும் செய்துள்ளார். 20 கிலோ வரை உடல் எடையை ஏற்றி இறக்கியுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் ஆக நடித்துள்ளார். நடிகை பூர்ணா சசிகலாவாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.