உறுதியானது…. யாஷ் பிறந்தநாளில் வெளியாகும் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர்!

கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் நடிகர் யாஷ் பிறந்தநாளன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் ப்ளாக் =பஸ்டர் வெற்றி பெற்றது. கன்னட சினிமாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செய்தது இந்தப் படம். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாடம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. கொரோனாவால் முடங்கிய இரண்டாம் பாகத்தின் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே கேஜிஎஃப் 2 படம் பற்றிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது படக்குழுவினர் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கேஜிஎஃப் கதாநாயகன் யாஷ் தனது பிறந்தநாளை ஜனவரி 8-ம் தேதி கொண்டாடுகிறார். எனவே யாஷ் பிறந்தநாளன்று நாங்கள் கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே எப்போதும் டிசம்பர் 21-ஆம் தேதி இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தனர். தற்போது டீசர் அப்டேட்-ம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். நடிகை ரவீனா டாண்டன்-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published.