‘மாறா’ படத்தின் ட்ரைலர் வெளியானது!… துல்கர் சல்மானின் நடிப்புக்கு ஈடு கொடுத்தாரா மாதவன்!?

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் திலீப் இயக்கத்தில் மாதவன் மாறா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Image

தற்போது மாறா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் மலையாள வெர்ஷனில் சிரித்து மாற்றங்கள் செய்துள்ளது போல் தெரிகிறது. மலையத்தில் துல்கரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. சார்லி படத்தின் வெற்றிக்கு துல்கர் சல்மானின் நடிப்பு தான் பெரும் பங்கு ஆற்றியது. மாறா படத்தின் ட்ரைலரைப் பார்க்கும் போது மாதவன், துல்கர் சல்மானின் நடிப்பை சமன் செய்வார் என்றே தோன்றுகிறது.

இப்படத்தில் மௌலி, ஷிவதா, அலெக்ஸ்சாண்டர் பாபு, கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விக்ரம் வேதா படத்தில் சேர்ந்து நடித்திருந்த மாதவன்- ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி இப்படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 8-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published.