உலகளவில் சாதனை படைத்த மாஸ்டர் படத்தின் டீசர்!

நேற்று தீபாவளி தினத்தில் மாஸ்டர் படத்தின் வெளியானதை அடுத்து, குறுகிய நேரத்தில் அதிக லைக்ஸ் குவித்த டீசர் என்ற சாதனை படைத்துள்ளது.

நேற்று நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை விமர்சையாகக் கொண்டாடினர். தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகியது. விஜய் ரசிகர்கள் தீபாவளியை விட வெகு விமர்சையாக மாஸ்டர் டீசரைக் கொண்டாடிவிட்டனர். டீசருக்கு பார்வைகள் வரும் முன்னே லைக்ஸ் லட்சத்தைத் தாண்டி சென்றது.

டீச்சரின் ஒவ்வொரு ஃபிரேமும் செம மாஸாக இருந்தது, முக்கியமாக விஜயும், விஜய் சேதுபதியும் சந்தித்துக் கொண்ட காட்சிகள்.

மாஸ்டர் படத்தின் டீசருக்கு இதுவரை 1.5 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 1.6 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது. வெளியான இரு நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்குகள், 78 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகள் டீசர் பெற்றுள்ளது. எனவே உலகளவில் குறுகிய நேரத்தில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது.

இதையடுத்து #MostLikedMasterTeaser என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

.

Leave a Comment

Your email address will not be published.