மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் மோகன்ராஜா… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை மோகன்ராஜா இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படம் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. பிரித்விராஜ் தான் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலே 100 கோடி வசூல் படம் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அதையடுத்து லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவித்தனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தில் முதலில் வேறு பல இயக்குனர்கள் இயக்கவிருப்பதாக இருந்தது. அதையடுத்து இயக்குனர் மோகன்ராஜா லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

Image

தற்போது சிரஞ்சீவியை இயக்கப்போவதை மோகன்ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “

எனது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்களுடன், வாழ்க்கை எப்போதும் எனக்கு சிறந்த மற்றும் பெரிய விஷயங்களை பரிசளித்து வருகிறது. இந்த நேரத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு மெகா திட்டத்தை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். உங்களின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் தேவை. ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.