வேலு நாச்சியாராக நடிக்கிறாரா நயன்தாரா!?

நடிகை நயன்தாரா வேலுநாச்சியார் வாழ்க்கைப் படத்தில் நடிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் ராணி வேலு நாச்சியரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு ஒரு படத்தை எடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இன்னும் சுவாரசியமாக அப்படத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தகவல் போலியானது என்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“நயன்தாரா ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. நயன்தாரா அத்தகைய திரைப்படத்தை திட்டவட்டமாக மறுக்கிறார். அவரின் சார்பாக நாங்கள் இதை ஊடகங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இதற்கிடையில், நயன்தரா விஜய் சேதுபதி உடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். பிப்ரவரி முதல் அண்ணாத்த படத்திலும் நடிக்க உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.