நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வேலி போட்ட அண்ணாத்த படக்குழுவினர்!?

நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைராபாத்தில் நடந்து வருகிறது. ரஜினி மற்றும் நயன்தாரா தனி விமானத்தில் ஹைதராபாத் சென்ற புகைப்படங்கள் கூட சமீபத்தில் வைரலாகின. படப்பிடிப்பில் உச்ச கட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் படப்பிடிப்பு நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பில் பையோ பப்பிள் என்ற பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பையோ பப்பிள் முறையில் இருப்பவர்களுடன் வெளியில் இருப்பவர்கள் நேரில் தொடர்புகொள்ள முடியாது. அதுபோல எந்தவித பொருள்களும் வெளியிலிருந்து வரமுடியாது. சாப்பாடு உட்பட.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படிப்பிற்காக விக்னேஷ் சிவனும் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார். ஆனால் நயன்தாரா பையோ பப்பிள் முறையில் இருப்பதால் இருவரால் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் காதல் பறவைகள் இருவரும் சோகத்தில் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கிவரும் அண்ணாத்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் மற்றும் ஜாக்கி ஷிராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், கீர்த்தி சுரேஷ் தனது சகோதரியாகவும் நடிக்கின்றனர்.

ஜனவரி 2021 க்குள் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.