சித்ரா பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறும் கதிர்… வைரல் வீடியோ!

சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜேவாக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ஜோடி தான் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மறைவைத் தாங்க முடியாமல் அவருடன் பணியாற்றிய சின்னத்திரை பிரபலங்கள் அவருடன் பெற்ற நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்த குமரன் தங்கராஜன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan)

வீடியோ முழுவதும் அவர் தேம்பி தேம்பி அழுவதைப் பார்க்கும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.