இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஏன் ஒட்டுமொத்த தமிழ் தொடர்களிலும் பிரபலமானது என்றே சொல்லலாம். நான்கு அண்ணன் தம்பிகளைச் சுற்றி நடந்து வரும் இக்கதை தமிழ் ரசிகர்களை பாசத்தால் கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தங்கள் வீடுகளில் ஒருவராக அங்கீகரித்தனர்.

இந்தத் தொடரில் முல்லை- கதிர் ஜோடிக்கு தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. துரதிர்ஷ்டவசமாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டது தமிழ் ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. அதையடுத்து வேறொருவர் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஹிந்தியில் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியன், இந்தி என வேறு மொழிகளில் உள்ள தொடர்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு தமிழ் தொடர் இந்தியில் ரீமேக் ஆவது இதுவே முதல் முறை. எனவே இது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மற்றுமொரு பெருமையாக அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.