உடம்பு சரியில்லைனா தியேட்டர் பக்கம் வந்துராதீங்க… பார்த்திபன் வேண்டுகோள்!

கொரோனாவால் பல மாதங்களுக்கு மேலாக பூட்டிக்கிடந்த தியேட்டர்கள் தற்போது மீண்டும் கதவுகளைத் திறந்துள்ளன. இருந்தாலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் வருவார்களா என்றொரு பக்கம், 50% சதவீத இருக்கைகள் மட்டுமே என்பதால் வசூல் வருமா என்றொரு பக்கம் திரைத்துறை திணறி வருகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை, வசனம் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாகப் பணியாற்றிய ஒத்த செருப்பு படம் லாக்டவுனிற்கு முன் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் அதிக நாட்கள் தியேட்டர்களில் ஓடவில்லை. அதனால் தற்போது தனது படத்தை மீண்டும் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்க ஆர்வம் காண்பித்து வருகிறார் பார்த்திபன்.

Image

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “புதூ படங்கள் வாரா gap-ல்,நம்ம படத்தை வுட்டு பார்க்கலாமே எனப் பார்த்தால் … அரங்கு கிடைப்பது அரிதாய் இருக்கிறது.அனேக தியேட்டர்களில் விளக்கை அணைத்துவிட்டு முரட்டு குத்து குத்துகிறார்கள்.(யதார்த்தம் புரியாமல் புலம்பலும் அலும்பலும் சலும்பலும் வேறு) மீறி கிடைக்கும் ஒரு (யதார்த்தம் புரியாமல் புலம்பலும் அலும்பலும் சலும்பலும் வேறு) மீறி கிடைக்கும் ஒரு சில screen-ல் நாளை/நாளை மறுநாள் ஒத்த ‘சிறப்பு’! பாருங்கள் – சர்வ பாதுகாப்புடன். அரைகுறை ஆரோக்கியத்துடன் அரங்கு வரவேண்டாம். என் ஜான் உடம்பை மீறி என்ன என்ஜாய்மென்ட்?” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.