மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன்- சிம்பு கூட்டணி? ‘போடா போடி 2’ உருவாகிறது!

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் போடா போடி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். வரலட்சுமியும் இந்தப் படத்தில் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போகிறாராம். போடா போடி படத்தைத் தயாரித்த பதம் குமார் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ரித்திகா பால் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ரித்திகா எங்கள் தயாரிப்பில் உருவாகும் இந்தி படம் ஒன்றில் நடிக்கிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சி பெற்று வருகிறார், ”

“நான் இப்போது சொல்லக்கூடியது என்னவென்றால், இந்த படத்தை நான் முன்னாள் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனரால் இயக்கப்படும்,” என்று மட்டுமே சொல்லமுடியும். இசையமைப்பாளரும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. போடா போடி படத்தில் தரண் நன்றாக இசையமைத்திருந்தார். போடா போடி படக்குழுவை அப்படியே தக்க வைக்கவே நான் முயற்சி செய்து வருகிறேன்.” என்று பதம் குமார் தெரிவித்துள்ளார்.

Image

இது முற்றிலும் புதிய ஸ்கிரிப்டாக இருக்கும். போடா போடி படம் முழுவதுமாக லண்டனில் அமைக்கப்பட்டிருந்தது. அதே போல இரண்டாம் பாகமும் முழுவதும் வெளிநாட்டில் தான் எடுக்கப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்த திரைப்படம் தொடங்கவிருக்கிறது. வெளிநாடுகளில் படம் எடுக்கப்பட இருப்பதால் தற்போது சாத்தியமில்லை. ஜூன் அல்லது ஜூலை 2021 க்கு முன்னர் படத்தைத் துவங்க முடியும் என்று தோன்றவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.