22 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் இணையும் பிரபுதேவா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் பிரபுதேவா இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசனின் 232-வது படமான விக்ரம் படத்தை இயக்கயுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்க உள்ளது. தற்போதைய அப்டேட் என்னவென்றால் பிரபுதேவா இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு வெளியான காதலா காதலா படத்தின் இணைந்து நடித்திருந்தனர். காமெடி ஜேர்னரில் வெளியான அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கமல்- பிரபுதேவா கூட்டணி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.

தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதால் கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விக்ரம் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டெர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பொலிட்டிக்கல் திரில்லர் ஜேர்னரில் இப்படம் உருவாக இருக்கிறது. ஒரே கட்டமாக முழுவீச்சில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.