மூன்று நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபுதேவா!?

இயக்குனர் டீக்கே இயக்கத்தில் பிரபு தேவா நடிக்க இருக்கும் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

யாமிருக்க பயமே படத்தின் இயக்குனர் டீக்கே உடன் பிரபுதேவா கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மூன்று நடிகைகள் பிரபுதேவாவுக்கு கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் காஜல் அகர்வால் ஒருவராக உறுதியாகிவிட்டதாகவும், மற்ற இருவர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபு தேவாவின் 50 வது படமான ‘பொன் மாணிக்கவேல்’ வெளியாகவிருந்த சமயத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பிரபுதேவா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பகீரா’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘மஞ்சப்பை’ படத்தின் இயக்குனர் ராகவன் உடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் ‘ராதே’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.