பாவக் கதைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவியை மிரட்டிய பிரகாஷ் ராஜ்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் அந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ படத்தில் பிரகாஷ் ராஜ் உடன் நடித்த அனுபவங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.

பாவக் கதைகள் அந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. பாவக் கதைகள் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் இரவு என்ற பகுதியை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். அதில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் சாய் பல்லவியின் அப்பாவாக நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி “பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டிவிட்டார். அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது.

Image

பாவக் கதைகள் படத்தின் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹலோ என்று சொன்னேன். அவர் ஏற்கனவே கண்டிப்புடன் கூடிய பார்வையுடன் என்னைப் பார்த்தார். உள்ளே நுழையும் போதே அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார்” என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய சாய் பல்லவி “பிரகாஷ் ராஜ் உடன் பணிபுரிவதை மிகவும் ரசித்தேன். எனது மருத்துவப் படிப்பைப் பற்றி விசாரித்தார். அதைப் பயிற்சி செய்யவும் வலியுறுத்தினார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.