சிம்பு படத்தில் தாசில்தாராக நடிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்!

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார்.

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆன பத்து தல திரைப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார். அவர் இப்படத்தில் தாசில்தாராக நடிக்க உள்ளாராம். பத்து தல படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

பல மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படம் அப்படியே முடங்கியது. தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிம்பு ‘மாநாடு’ படப்பிடிப்பில் மும்மரமாக நடித்து வருகிறார். பாண்டிசேரியில் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஏற்காட்டில் நடந்து வருகிறது.

Image

மாநாடு படத்தின் தற்போதைய படப்பிடிப்பை முடித்த பின்னர் சிம்பு இப்படத்தில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.