விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… வைரல் வீடியோ!

ரஜினிகாந்த் விமானத்தில் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினி கடந்த 12-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். வழக்கம் போல அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை திருவிழா போலக் கொண்டாடினார். உலகத்தின் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் ரஜினிக்குத் தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Image

நேற்று ரஜினி அண்ணத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த விமானத்தில் நடிகை நயன்தாராவும் பயணம் செய்தார்.

தற்போது ரஜினி விமானத்தில் விமான ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கேக் வெட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஊழியர்கள் பாட்டு பாடி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published.