கேட்டது பாபா சின்னம்… கிடைச்சது ஆட்டோ சின்னம்… ரஜினி கட்சியின் பெயர் என்ன தெரியுமா!?

நடிகர் ரஜினிகாந்த் புதிதாகத் துவங்க உள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி நீண்ட காலமாக தொடர்ந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த மாதம் கட்சி துவங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ரஜினி தொடங்கவிருக்கும் கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என்று பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பாபா முத்திரையை சின்னமாக ஒதுக்கக் கோரிக்கை வைத்ததாகவும், தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் என்ற பாடலின் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தையும், கடின உழைப்பையும் பற்றி பாடி அசத்தியிருப்பார். அதையடுத்து பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் ரஜினி ரசிகர்களாக மாறினர். தற்போது ரஜினியின் கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரஜினி ஹைதராபாத்தில் நடந்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.