சசிகுமார் படத்தில் நடிக்கும் உண்மையான சிறைக் கைதிகள்!

நடிகர் சசிகுமார், திருமணம் எனும் நிக்கா படத்தின் இயக்குனர் அனீஸ் உடன் கூட்டணி அமைத்து புதிய படத்தில் சிறைக் கைதிகளை நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகுமார்- அனீஸ் கூட்டணியில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை 4மங்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து பேசிய இயக்குனர் அனீஸ் “த்ரில்லர் அம்சங்களைக் கொண்ட சோசியல் ட்ராமா படமாக உருவாக இருக்கிறது. தனது எதிரி மீது கூட அன்பு காட்டும் ஹீரோ என்பதால் படத்திற்கு பகைவனுக்கு அருள்வாய் என்று தலைப்பு பொருத்தமாக இருந்தது. இது பாரதியார் பாடலின் வரிகள். சசிகுமார் வழக்கமாக அவருக்கு ஒத்துவரும் கதாபாத்திரங்களில் தான் நடிப்பார். ஆனால் இங்கே வித்தியாசம் என்னவென்றால், படம் நகரத்தில் நடக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது, எனவே இந்தக் கதாபாத்திரம் அவருக்கு சற்று வித்தியாசமாக இருக்கும். ” என்று தெரிவித்துள்ளார்.


நாசர் மற்றும் ஜெயபிரகாஷ் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். சுவாரஸ்யமாக, இந்த படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடிக்க முன்னாள் கைதிகள் சிலரை இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார். “இந்த திரைப்படம் கைதிகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும் பேசும், எனவே சிறையில் நேரம் செலவிட்டவர்களை நடிக்க வைத்தால் கதைக்கு நம்பகத்தன்மையை இருக்கும் என்று நான் உணர்ந்தேன்” என்று இயக்குனர் அனிஸ் கூறுகிறார்.

Leave a Comment

Your email address will not be published.